சிரஞ்சீவியின் அடுத்த படத்தை பிரம்மாண்டமாக இயக்கும் தனி ஒருவன் பட இயக்குனர் !

76

மோகன் ராஜா…

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார் ஜெயம் ரவி, இவர் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் உருவான தனிஒருவன் படத்தின் மூலம் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக நுழைந்துள்ளார். ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இவர் M. குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் , தனி ஒருவன், வேலைக்காரன் போன்று ஏராளமான தரமான படங்களை கொடுத்துள்ளார். இதனால் இவரின் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது ஜெயம்ரவி நடித்திருக்கும் தனிஒருவன் 2 படத்தின் பணிகளை செய்து வருவதாக கூறப்பட்டது. அதன் பிறகு தியாகராஜன் தயாரிப்பில், பிரசாந்த் நடிப்பில், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை எடுப்பதாக இருந்தது.

பிறகு பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனரான JJ பிரெட்ரிக் அந்த படத்தின் ரீமேக்கை இயக்க போகிறார் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மோகன் ராஜா தற்போது திடீரென அவர் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மோகன் ராஜா தனது Twitter பக்கத்தில், “சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. என்னுடைய பெற்றோர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஆசியால் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தான் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா இயக்க போகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.