மிஷ்கின் படத்தில் பேயாக நடிக்கும் பிரபல நடிகை?

119

மிஷ்கின்..

ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி. விஷாலின் சண்டக்கோழி மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

இந்த வரிசையில் 2014-ல் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிக்க மிஷ்கின் இயக்குகிறார்.

படப்பிடிப்பு வேலைகளை தொடங்கி உள்ளனர். பேய் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பூர்ணா பேயாக நடிப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தை விட அதிக திகில் காட்சிகள் இதில் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் அரங்குகள் அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே பேயாக நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.