ஏலியனுடன் கூட்டணி சேரும் அவன் – இவன் கதாநாயகர்கள் – Enemy படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

105

ஆர்யா – விஷால்…

ரெண்டு பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிக்கிற படங்கள்னா ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பும், ஒரு குதூகலமும் இருக்கும். அதுவே அந்த ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தா, இன்னும் வேற லெவல் தானே. ஏற்கனவே பாலா இயக்கத்துல அவன் – இவன் படத்துல நடிச்ச ஆர்யா – விஷால் தான் இன்னொரு படத்துலயும் நடிக்க போறாங்க.

அழுக்கும் பரட்டையுமா நடிச்ச இந்த ரெண்டு பேரும், இப்போ பெரிய துப்பாக்கி, ஃபிட்டான டிரெஸ்னு அமர்க்களமா இருக்க போறாங்க. இந்த படத்துக்கு எனிமி (Enemy), அப்படினு தலைப்பு வச்சிருக்காங்க.

படத்தோட போஸ்டரையும் இன்னைக்கு வெளியிட்டிருக்காங்க. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்குகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்துல ஏலியனா நடிச்ச மிர்னாலினி தான் படத்தின் கதாநாயகி. படத்தோட இசையமைப்பாளர், நம்ம ஒஸ்தி மாமே ’தமன்’.

அருவி படத்த வெட்டி ஒட்டுன ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராகவும், ராஜசேகர் ஒளிப்பதிவும் பண்றாங்க. இந்த படத்துல சண்டை காட்சிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கதால அந்த பகுதிகளுக்கு மட்டும் ரவி வர்மா ஒளிப்பதிவு பண்ண இருக்கிறார்.

”Enemy-க்காக காத்திருக்கிறேன்” என்று ஆர்யாவும், ”அன்புள்ள Enemy ஆர்யா, நீ இனிமே என் நண்பன் கிடையாது. முதல் தாக்குதலுக்காக 22ஆம் தேதி வரைக்கும் காத்திரு, உன்னோட மோசமான எதிரி நான்தான்-னு காட்றேன்” அப்படினு விஷாலும் ட்வீட் செய்து Enemy படத்தின் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.