மீண்டும் இணையும் ‘சிவா மனசுல சக்தி’ கூட்டணி?

97

ஜீவா – ராஜேஷ்…

‘சிவா மனசுல சக்தி’ என்கிற ஹிட் படத்தை கொடுத்த ஜீவா – ராஜேஷ் கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாம்.

ஜீவா நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக வெளியாகி இருந்த இதில் ஜீவா, சந்தானம் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.ஜீவாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து பெரிய பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன.

இந்நிலையில், நடிகர் ஜீவா – இயக்குனர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கதையை சிவா மனசுல சக்தி பட பாணியில் ராஜேஷ் அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் காமெடியனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் குறித்த அறிவிப்பை பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். நடிகர் ஜீவா தற்போது மேதாவி, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.