‘அந்தாதூன்’ ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்! இசையமைப்பாளரும் அறிவிப்பு!

129

அந்தாதூன்..

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிரசாந்த் நடிப்பில் ’பொன்மகள்வந்தாள்’ இயக்குனர் பெடரிக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் தபு நடித்த கேரக்டரில் சிம்ரன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது அந்தாதூன்’ ரீமேக்கில் நவரச நாயகன் கார்த்திக் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய படங்களில் நடித்த கார்த்தி, கடந்த ஆண்டு வெளியான ‘தேவ்’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ‘அந்தாதூன்’ படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது