விஜய் சேதுபதி பட ரீமேக்கில் நடிக்க ம று த்த முன்னணி நடிகர்.. த டு மா றும் ஹி ட் படம்!!

127

விக்ரம் வேதா……….

விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படமாக இருந்தது விக்ரம் வேதா. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதில் விஜய் சேதுபதி வி ல்ல த்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் சேதுபதிக்கு சரிசமமான கதாபாத்திரமாக அமைந்தது மாதவன் கதாபாத்திரம். இந்த படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

முக்கியமாக பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை இந்தப்படம் மிகவும் கவர்ந்ததால் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில் ஹிந்தியில் அமீர்கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் நடிக்க இருந்தனர்.

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஷாருக்கான் தன்னுடைய கதாபாத்திரத்தில் பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை என கருதி விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அமீர்கான் மற்றும் சைப் அலிகான் ஆகிய இருவரும் நடிக்க இருந்த நிலையில் தற்போது அமீர்கானும் இந்த ரீமேக் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது.

இதனால் ஒரு சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீமேக் ஆக முடியாமல் ஹிந்தியில் தட்டு தடுமாறி வருகிறது. யார் நடித்தாலும் இந்த படம் வெற்றி பெறும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.