நான் பண்ண தப்ப யாரும் பண்ண வேண்டாம்: ஷகிலா வேண்டுகோள்!

737

ஷகிலா….

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகிலா, நான் பண்ண தப்ப யாரும் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

தனது 16ஆவது வயதில் பிளே கேர்ள்ஸ் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷகிலா. அதன் பிறகு தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

வயது வந்தோருக்கான படங்களில் நடித்து இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளங்களை உருவாக்கிக் கொண்டார். திரைபிலங்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பெரும்பாலும், ஷகிலா நடித்த படங்கள் ஆ பா ச காட்சிகளை கொ ண்ட படங்களாகவே அமைந்துள்ளன. பார்ன் மூவிஸ் படங்களில் நடித்துள்ளார். திரையில் உச்சம் தொட்ட போதும், அவர் நடித்த படங்களை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

அதையும் தாண்டி சினிமாவில் சாதித்து காட்டியவர் நடிகை ஷகிலா. ஒரு கட்டத்தில், ஆ பா ச படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார். உடல் எடையை வெகுவாக குறைத்து தனது அழகை மேலும் அழகூட்டியிருக்கிறார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 என்ற சமையல் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொ ண்டுள்ளார். இந்த நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் எழுதி ஷகிலா படத்தை இயக்கியுள்ளார். ஷகிலா என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஷகிலா கதாபாத்திரத்தில், ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீனா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹிந்தியில் உருவாக்கப்பட்டுள்ள ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொ ண்ட நடிகை ஷகிலா கூறுகையில், எனக்கு தெரிந்து எனது வாழ்க்கையில், நான் பண்ண தப்ப யாரும் பண்ண வேண்டாம். படிக்கும் பெண்களாக இருக்கட்டும், டிரெண்டிங் நடிகையாக இருக்கட்டும் யாரும் என்னைப் போன்று ஏமாந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, இந்தப் படத்திலிருந்து எனக்கு அனுதாபமோ அல்லது புதிய மரியாதையோ தேவையில்லை. என்னைப் பற்றி எழுதப்பட்ட பல விஷயங்களை நான் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

என் பின்னால் பேசியவர்களைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதே இல்லை. என் முகத்திற்கு நேராக பேசும் தைரியம் இங்கு யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கை மற்றும் அவர் ஆ பா ச படங்களில் நடிப்பதற்கான காரணங்கள், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட சூழல், சினிமாவில் பல அவமானங்களையும் தாண்டி அவர் கடந்து வந்த பாதை, ஆகியவற்றை விவரிக்கும் வகையில், ஷகிலா வாழ்க்கை வரலாற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.