வனிதாவின் பிரேக்கப் குறித்து மகள் போட்ட முதல் பதிவு…!

62

ஜோவிகா…

நடிகை வனிதா சமீபத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டு அதிர வைத்த நிலையில், அவரது மகள் போடப்பட்டிருக்கம் டுவிட்டர் பதிவு மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் இவர் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. வனிதா – பீட்டர் பால் திருமண உறவு சில மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார் வனிதா. அதில், மீண்டும் காதல், இப்போ சந்தோசமா ? என்று உமா இப்போ என்ற கணக்கை டேக் செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதா மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா என்று சந்தேகித்து வருகின்றனர்.

தற்போது வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விவாகரத்து பரவாயில்லை, பிரேக்அப் பரவாயில்லை, அதிலிருந்து கடந்து வருவது பரவாயில்லை.

ஆனால், ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என்ற ஒரு கருத்தை பதிவிடுள்ளார். வனிதாவை போல அவரது மகளும் இந்த வயதிலேயே இப்படி முதிர்ச்சியான கருத்துக்களை பேசி இருக்கிறார்.