விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து வெளியேறிய அமீர்கான்!

82

அமீர்கான்…

கடந்த 2017-ல் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது.

அதனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது. அதை தொடர்ந்து விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் தயாரிக்கப்போவதாக ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தின் மூலம் அமீர்கான் மற்றும் சைப் அலி கான் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக படம் மேற்கொண்டு நகரவில்லை.

இந்தநிலையில் தான் இந்தப்படத்தில் இருந்து அமீர்கான் வெளியேறிவிட்டார் என தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஒருபக்கம் படத்தின் திரைக்கதை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதாலும்,

மேலும் இந்த படத்தை தயாரிப்பார்களா என உறுதியில்லாத நிலை இருப்பதாலும் தான், அமீர்கான் இந்தப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.