என்ன மச்சான்? நான் ரொம்ப அழகா? முன்னாள் பிக்பாஸ் நடிகையின் அழகிய வீடியோ!

70

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது மில்லியன்கணக்கான ஃபாலோயர்களால் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் கேப்ஷனாக ’என்ன மச்சான், நான் அழகா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஷால் நடித்த ’சமர்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகோ அழகு அவள் பேரழகு’ என்ற பாடலுக்கு மிக அழகாக நடனமாடி உள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனை அடுத்து அவர் பதிவு செய்துள்ள இன்னொரு பதிவில், தனிமையில் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’நான் தனியாக நிற்கிறேன் என்றால் தனியாக இருக்கிறேன் என்று அர்த்தமல்ல.

எந்த ஒரு விஷயத்தையும் நான் தனியாக கையாளும் அளவுக்கு வலிமையானவர் என்பது பொருள்’ என்றும் பதிவு செய்துள்ளார். சாக்‌ஷி அகர்வாலின் இந்த இரண்டு லேட்டஸ்ட் பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

மேலும் சாக்‌ஷி அகர்வால் தற்போது ’சிண்ட்ரெல்லா’, ‘டெடி’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ‘அரண்மனை 3’, மற்றும் ‘புரவி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ‘டெடி’ விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.