‘சூரரை போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!

110

சூரரை போற்று..

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரை போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளி வந்தது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியான முதல் மாஸ் நடிகரின் படம் இதுதான் என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் விமர்சன அளவிலும் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது சர்வதேச அளவில் கெளரவம் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள 78வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ’சூரரை போற்று’ படம் திரையிடப்பட உள்ளதாக சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் மிகச் சில படங்கள் மட்டுமே திரையிடப்பட உள்ள நிலையில் அதில் சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படமும் ஒன்று என்பது தமிழ் சினிமா உலகிற்கே ஒரு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.