தளபதி விஜய்யின் இந்த பதிவிற்கு 4 லட்சம் லைக்ஸ்-ஆ? தென்னிந்திய அளவில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை..!

917

தளபதி விஜய்..

தளபதி விஜய் தற்போது தென்னிந்திய அளவில் கொண்டாடப்படும் மிக பெரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எதிர்பார்ப்படுகிறது.

அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் அழைப்பை ஏற்று கிறீன் இந்தியா சவாலாக தனது வீட்டில் மரம் ஒன்றை விதைத்தார்.

மேலும் அதனை “இது உங்களுக்காக மகேஷ் பாபு” என புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இதனிடையே தற்போது அந்த பதிவிற்கு 4 லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ்கள் குவிந்துள்ளது.

இது வேறு எந்த ஒரு தென்னிந்திய நடிகர்களும் செய்திராத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.