லவ்வர்ஸை பிரிச்ச அண்ணாத்த படப்பிடிப்பு: வருத்தத்தில் லேடி சூப்பர்ஸ்டார்!

66

நயன்தாரா – விக்னேஷ் சிவன்…

ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா, உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை இருப்பதால், அங்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் இருக்கும் காதலர் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் படம் அண்ணாத்த. ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணையும் முதல் படம் அண்ணாத்த என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளனர்.

ரஜினியின் மனைவியாக நயன் ராவும், சகோதரியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறத். இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட நாட்களாக லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த நிலையிலிருந்து மீண்டு ஒவ்வொரு மாநிலமும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதன் விளைவாக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை (Bio-Bubble Protocol) பின்பற்றப்படுகிறது.

அதாவது, படப்பிடிப்பில் இருப்பவர்கள் வெளி நபரை பார்க்கவும் கூடாது, அவர்களுடன் வெளியில் சென்றுவரவும் கூடாது. இந்த உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை நடைமுறையில் இருக்கும் நிலையில், ஹைதராபாத்திலேயே காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வரும் காதலர் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் நயன் தாரா வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போன்று நயன்தாரா எங்கு படப்பிடிப்பு சென்றாலும், அவருடன் சென்று வரும் விக்னேஷ் சிவன் தற்போது ஒரே இடத்தில் இருந்தும் நயன் தாராவை பார்க்க முடியாமல் மிகவும் வருத்தப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதுவரையில், இது போன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்திருந்தது கிடையாதாம். கோயிலுக்கு சென்றாலும், ஷாப்பிங் சென்றாலும், படப்பிடிப்பிற்கு சென்றாலும் இருவரும் இணைந்தே சென்றுள்ளனர். நீண்ட காலமாக காதலித்து வரும் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஹைதராபாத்தில் ரமோஜி பிலிம் சிட்டியில் கிட்டத்தட்ட 45 நாட்கள் நடந்து வரும் படப்பிடிப்பு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வரும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்து வருவதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினிகாந்த் தனது அ ர சி ய ல் க ட் சியின் பெ யர், சின்னம், கொ ள்கைகள் பற்றி அறிவிப்பார் என்று எ தி ர்பார்க்கப்படுகிறது.