வெரைட்டி லுக்கில் சாக்லெட் பாய் மாதவன்: வைரலாகும் புகைப்படங்கள்!

98

மாதவன்…

பல்வேறு விதமான கெட்டப்புகளில் இருக்கும் நடிகர் மாதவனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மாதவன். இந்தப் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.

உன்ன விரும்பல, உன மேல் ஆசைப்படல, நீ ரொம்ப அழகா இருக்கேனு நினைக்கில. ஆனால், இதெல்லாம் நடந்திருமோ என்று பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு என்று ஷாலினியைப் பார்த்து லவ் புரோபோஸ் செய்யும் மாதவனின் க்யூட்டான காட்சி ரசிகர்களிடையே இன்றும் பேசப்படுகிறது.

இளைஞர்களை இதே டெக்னிக்கை இன்றும் பின்பற்றி தங்களது காதலியிடம் லவ் புரோபோஸ் செய்கின்றனர். தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்த மாதவன், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அண்மையில், மாதவன், அனுஷ்கா ஆகியோரது நடிப்பில் உருவான சைலென்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

தற்போது மாதவன் நடிப்பில் மாறா மற்றும் ராக்கெட்ரி – நம்பி விளைவு ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் சிம்ரன் நடிக்கிறார். முன்னாள் இந்திய விஞ்ஞானி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணன் என்பவரது வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில், இந்தப் படம் திரைக்கு வரும் நிலையில், தற்போது மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதில், ஒன்றில், சத்திரபதி சிவாஜி மகாராஜ், கோரைப்பல்லு மற்றும் தலையில் தலைப்பாகையுடன் இருக்கும் புகைப்படம் என்று பல்வேறு கெட்டப்புகளில் தோற்றமளிக்கிறார்.

இதில், எந்த புகைப்படம் சிறந்தது என்றும், எது பிடிக்கவில்லை என்றும் கேட்டு பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள மாறா படம் வரும் ஜனவரி 8 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.