‘பாவக் கதைகள்’ இயக்குனர்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு ஆந்தாலஜி படம்?

71

பாவக் கதைகள்..

‘பாவக் கதைகள்’ படத்தை இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் இணைந்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் ‘சில்லுக்கருப்பட்டி’, ‘புத்தம் புது காலை’ போன்ற ஆந்தாலஜி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘பாவக் கதைகள்’ எனும் ஆந்தாலஜி படம் வெளியானது.

ஆ.ண.வ.க்கொ.லை.யை க.தை.க்கருவாக வைத்து உ.ருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, கெளதம் மேனன்
இந்நிலையில், பாவக் கதைகள் படத்தை இயக்கிய அதே இயக்குனர்களை வைத்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.