அர்ச்சனாவிடம் அனிதா ரகசியமாக பேசியது என்ன? ஆரி சொல்ல வந்தது இதைத்தானா? கசிந்த வீடியோ!

99

அனிதா…

நேற்றுமுன்தினம் டாஸ்க் ஒன்றில் ஷிவானி ஆரியிடம் டிமோட்டிவேஷன் குறித்த ஒரு கேள்வி கேட்டபோது, அனிதா குறித்தும் அவரது கணவர் மற்றும் பெற்றோர் குறித்தும் ஆரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடைமறித்த அனிதா ’பிக்பாஸ் வீட்டில் விளையாடுபவர் நான் தான் என்றும், என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், ஆனால் எனது அப்பா அம்மா மற்றும் கணவரை பற்றி பேசவேண்டாம் என்று கூறினார்

அனிதா அவ்வளவு தூரம் எதிர்ப்பு தெரிவித்தும் ஆரி அதற்கு விளக்கமளித்தார். இதை நானாகச் சொல்லவில்லை நீங்கள் சொன்ன ஒரு விஷயம்தான், அர்ச்சனாவிடம் நீங்கள் சொன்ன ஒரு விஷயத்தை தான் நான் இப்போது கூறுகிறேன் என்று ஆரி கூற,

அதனை ஒப்புக் கொள்ளாமல் அனிதா கொஞ்சம் கோபமாகவே கத்தி எனது பெற்றோர் மற்றும் கணவரை பற்றி பேசாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறினார், இதனை அடுத்து ரம்யா, பாலா, ரியோ உள்பட பலர் அனிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து ஆரி தனது பேச்சை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரி சொல்ல வந்தது என்ன என்பது குறித்த வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. அந்த வீடியோவில் அர்ச்சனாவின் மேல் படுத்துக்கொண்டு அழுது கொண்டே அனிதா கூறும்போது ’நான் நிறைய இந்த வீட்டில் சண்டை போட்டு விட்டேன், என்னுடைய அப்பா அம்மா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க.

நீ ஏன் சண்டை போட்ட என்ற என்னுடைய வீட்டில் என்னை திட்டுவார்கள். சும்மாவே எங்க அப்பா யாரையும் காயப்படுத்த கூடாது என்று சொல்லுவார். ஆனால் நான் சண்டை போட்டதை பார்த்ததும் கண்டிப்பாக என்னை திட்டுவார் என்று அழுது கொண்டே கூறினார். அப்போது அர்ச்சனா அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறுகிறார்

இந்த காட்சியை பார்த்துவிட்டு ஆரி, அனிதாவுக்கு டிமோட்டிவேஷன் இருக்கின்றது என்பதை கூற வந்தார் என்பதும் ஆனால் அவரை பேச விடாமல் அனிதா தடுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.