அப்போது தலைவா: இப்போது வெப் சீரிஸ்: போலீஸ் அதிகாரியாக கலக்கும் அமலா பால்!

75

அமலா பால்…

இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் உருவாகும் பேண்டஸி வெப் சீரிஸ் ஒன்றில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி, சூர்யா, பாபி சிம்ஹா, அரவிந்த் சாமி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில், கடைசியாக வெளியான படம் ஆடை.

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல், நடித்த அமலா பாலின் ஆடை படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏராளமான கேமரா மேன்கள் முன்பு ஆடையில்லாமல் நடித்துள்ளார். என்னதான் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

நீண்ட நாட்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அமலா பாலிற்கு தொடர்ந்து, தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது வெப் சீரிஸ் பக்கத்தில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஆம், கன்னடத்தில் பிரபல இயக்குநராக வலம் வரும் பவன் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் குடி யெடமைதே (Kudi Yedamaithe) என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 8 எபிசோடுகள் கொண்ட குடி யெடமைதே என்ற வெப் சீரிஸ் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

குடி யெடமைதே என்ற வெப் சீரிஸில் நடிக்கும் அமலா பாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், போலிஸ் கதாபாத்திரத்தில் கலக்கும் அமலா பால் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். இதற்கு முன்னதாக தளபதி விஜய் நடித்த தலைவா படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிக்கும் ராகுல் விஜய் டெலிவரி பாயாக நடித்துள்ளார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வெப் சீரிஸ் பேண்டஸி த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த வெப் சீரிஸ் தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி சீரிஸிலும் முக்கிய ரோலில் அமலா பால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.