அ ரசியலுக்காக ஓவர்டைம் வேலை பாக்கும் ரஜினிகாந்த்!

67

ரஜினிகாந்த்…

வரும் 31 ஆம் தேதி தனது அ ர சி யல் க ட் சி குறித்து அறிவிக்க உள்ள நிலையில், அண்ணாத்த படத்திற்காக ரஜினிகாந்த் அதிக நேரம் பணியாற்றி வருகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் படம் அண்ணாத்த.

ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணையும் முதல் படம் அண்ணாத்த என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எ திர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

நாடு முழுவதும் தா க் க த்தை ஏ ற்படுத்திய கொரோனாவுக்கு முன்னதாகவே அண்ணாத்த படத்தை 40 சதவிகிதம் முடித்துவிட்டனர். வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் க ட் சி தொ ட ங்கி அ ர சி ய லில் மு ழு வீ ச் சில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்னதாக அண்ணாத்த படத்தில் தனது காட்சிகள் முழுவதையும் படமாக்கிவிட வேண்டும் என்று படக்குழுவினரை அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளனர்.

ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், சகோதரியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 14 மணி நேரம் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதால், ஏற்கனவே திட்டமிட்டதை விட படு வேகமாக ஒவ்வொரு காட்சிகளும் படமாக்கப்பட்டுவருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வரும் 30 ஆம் தேதி சென்னை திரும்பும் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தபடி 31 ஆம் தேதி அ ர சி யல் க ட் சி கு றித்து அறிவிப்பு வெளியிடுகிறார். அதன் பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது காட்சிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முடித்த பிறகு, அரசியல் கட்சி, பெயர், கொள்கைகள் குறித்து அறிவித்துவிட்டு முழுவீச்சில் தனது அ ர சி ய ல் ப ய ணத்தை ரஜினிகாந்த் மேற்கொள்வார் என்று எ திர்பார்க்கப்படுகிறது.