ஹன்சிகாவின் கடைசி வாய்ப்பு: மஹா கொடுத்த புதிய அப்டேட்!

71

ஹன்சிகா…

மஹா படம் குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தார். ஹோம்லி லுக்கில் வந்த ஹன்சிகா நாள்டைவில் கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

மாப்பிள்ளை படத்தைத் தொடர்ந்து, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், புலி, வாலு, மனிதன், போகன், குலேபகாவலி, துப்பாக்கி முனை, 100 என்று வரிசையாக தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மஹா என்ற படத்தில் நடித்துள்ளார். யுஆர் ஜமீல் இயக்கத்தில், எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்குப் பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சிம்பு சிறப்புத் தோற்றத்தில் அதுவும் பைலட்டாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர், படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு அனைத்து காட்சிகளை விறுவிறுப்பாக எடுத்து முடித்துவிட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது குறித்து ஹன்சிகா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இது என்னுடைய 50ஆவது படம் மஹா.

இப்படத்தில், என்னுடைய தனித்துவமான பயணம் இது. இதயப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் என்னுடன் நடித்த சக நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படம் உருவாகும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளைத் தொடர்ந்து மஹா படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹா படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மஹா படத்திற்குப் பிறகு ஹன்சிகாவிற்கு எந்தப் படமும் கைவசம் இல்லை. முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா தற்போது வாய்ப்பில்லாமல், தினந்தோறும் தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.