ஹிந்திக்குச் செல்லும் ராஷ்மிகா மந்தானா!

66

ராஷ்மிகா மந்தானா…

தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

விஜய், சூர்யா அடுத்து நடிக்க உள்ள படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க ராஷ்மிகாவிடம் பேசி வருகிறார்கள் என்ற தகவல் வெளியானது. ஆனால், அவரோ பாலிவுட் பக்கம் தாவ முடிவு செய்துவிட்டார்.

ஷாந்தனு பாக்ச்சி இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா கதாநாயகனாக நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார் ராஷ்மிகா.

“நண்பர்களே, உங்களுக்கு ஒரு செய்தி, இதில் பங்கெடுப்பது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது.

ஒரு புதிய பயணம். பாகிஸ்தானுக்குள் ‘ரா’வின் துணிச்சலான மிஷன், நிஜ சம்பவங்களின் தாக்கத்தால் உருவாகும் ‘மிஷன் மஜ்னு’ என தனது டுவிட்டர் பதிவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.