மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தி?

77

ஆண்ட்ரியா…

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, அப்படக்குழு மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சில தினங்களுக்கு முன் ஆண்ட்ரியாவின் பிறந்தநாளன்று மாஸ்டர் படக்குழுவினர் ஆண்ட்ரியா-விஜய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதேபோல் மிஷ்கினின் பிசாசு 2 படக்குழுவும் ஆண்ட்ரியாவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர்.

இதில் பிசாசு 2 பட போஸ்டரை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா, மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தை லைக் கூட செய்யவில்லை.

இதனை பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தியில் இருக்கிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஆண்ட்ரியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.