மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் வரலட்சுமி!

112

வரலட்சுமி…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் டேனி, கன்னிராசி திரைப்படங்கள் வெளியானது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே ‘காட்டேரி’ படத்தை இயக்கியுள்ளார். இதில் வரலட்சுமியுடன் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ஆத்மிகா, சோனம் பஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் குறித்து வரலட்சுமி மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, காட்டேரி திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. தியேட்டரில் எல்லோரும் ரசிக்கும் விதமாக டீகே இயக்கி இருக்கிறார்.

நான் இந்த படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது. இயக்குனர் டீகே, கதை சொன்ன விதமும், எடுத்த விதமும் எனக்கு பிடித்தது. டீகே இயக்கும் அடுத்த படத்திலும் நான் நடிப்பேன் என்று கலகலப்பாக கூறினார்.