சக்தி வாய்ந்தவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை – தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் விமர்சனம்!

81

தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ்..

ஹாலிவுட்டில் வெளியான தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

மனித இனமும், மனித இனத்தில் சக்தி வாய்ந்தவர்கள் என இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள். மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுத்தி அதை டி.வி.யில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

இதில் புரட்சி ஏற்பட்டு சக்தி வாய்ந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இறுதியில் சக்தி வாய்ந்தவர்கள் தங்களுக்குள் நடைபெற்று வந்த சண்டையை முடித்துக் கொண்டார்களா? இவர்களுக்குள் சண்டை ஏற்பட காரணமாக இருந்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹாலிவுட் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் கதை அம்சம் கொண்ட படங்கள் வரிசையில் தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், மற்ற படங்களுக்கு நிகராக இந்த படம் அமையாதது வருத்தம்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் போல், இந்த படம் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் ஓரளவிற்கு ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யம், விறுவிறுப்பு இல்லாமல் படம் நகர்கிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும், சண்டைக் காட்சிகளையும் ஆங்காங்கே ரசிக்க முடிகிறது. மற்ற ஹாலிவுட் படங்கள் போல் இப்படம் இருக்கும் என்று நம்பி சென்றால் ஏமாற்றமே…
மொத்தத்தில் ‘தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ்’ சுவாரஸ்யம் இல்லை.