“இனிமே சிம்பு Time-தான்” தெறிக்கவிடும் MUFTI தமிழ் ரீமேக்கின் Title !

97

சிம்பு…

Talk Of The Town என்னன்னா சிம்பு உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போவதுதான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் சிலம்பரசன்.

Chart போட்டு பெண்டிங்கில் இருக்கும் எல்லாம் படங்களையும் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த இவர், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பாக நடிக்க ஒற்றுகொண்ட மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு.

கன்னட Blockbuster ஆன இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இதில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘பத்து தல’ என்று மாஸ் Title வைத்துள்ளார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” இனி சிம்பு Time- தான்” என்று Comment அடிக்கிறார்கள். பாதி ஷூட்டிங்கில் நின்ற இந்த படம், மீண்டும் படு ஸ்பீடாக துவங்க காத்திருக்கிறார்கள். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.