சக்தி வாய்ந்த கல்லால் நடக்கும் விபரீதம்…. வொண்டர் உமன் 1984 விமர்சனம்!

479

வொண்டர் உமன் 1984…

நாயகி கிறிஸ் பைன் மியூசியத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆங்காங்கே நடக்கும் தவறுகளை சண்டைபோட்டு சரி செய்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்பிஐ, ஒரு கல்லை பற்றி தகவல் கொடுக்கிறார்கள். மேலும் இந்த கல்லை அபகரிக்க ஒரு கூட்டம் செயல் படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

கல்லை பற்றி ஆராய்ச்சி செய்யும் போது விவரம் இல்லாத ஒரு பெண்ணும் வேலைக்கு சேர்கிறார். ஆராய்ச்சியில் இந்த கல்லை வைத்துக் கொண்டு மனதில் நினைத்தால் அது நிஜத்தில் நடக்கும் என்பதை அறிகிறார்கள்.

இந்நிலையில், ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விவரம் இல்லாத பெண், கிறிஸ் பைன் போல் சக்தி வாய்ந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கிறிஸ் பைன் இடம் உள்ள சக்தி எல்லாம் விவரம் இல்லாத பெண்ணுக்கு செல்கிறது.

இதே சமயம் வில்லனும் கல்லை அபகரித்து விடுகிறார். இறுதியில் கிறிஸ் பைன், இழந்த சக்தியை பெற்றாரா? வில்லனிடம் இருந்து சக்தி வாய்ந்த கல்லை மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

டிசி சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் வொண்டர் உமன் 1984 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு பின்னணியில் நடக்கும் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

டிசி படங்களில் எப்போதும் முதல் பாதி மெதுவாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் இருக்கும். அதேபோல் இந்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏற்றவாறு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் திரைப்படம் நகர்கிறது.

கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசையும், ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் ‘வொண்டர் உமன் 1984’ வொண்டர்ஃபுள்.