மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர், எதிர்பார்க்காத நேரத்தில் வெளியானதால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!

80

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 19 நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் வெளியீடு குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பிரபல போஸ்டர் டிசைனரான கோபி பிரசன்னா தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் புதிய பேன் மேட் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.