மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்ற நடிகர்! அதிரடியான முடிவு! பயத்தில் ஆழ்த்திய சம்பவம்!

411

யஷ்…

கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யஷ் தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிக பொருட் செலவில் இந்த ஆக்‌ஷன் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மறுவடிவம் பெற்று வெளிநாடுகளில் மேலும் தாக்க தொடங்கியுள்ள வந்த செய்தியின் எதிரொலியாலும்,

வெளிநாட்டிலிருந்து கர்நாடகா வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கர்நாடகாவில் மீண்டும் இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பிலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கே.ஜி.எஃப் 2 கதாநாயகன் யஷ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் குடும்பத்தை விட்டு பிரிந்து, விலகி இருந்து, வெளியே தனியாக ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினாராம்.

தன்னோடு பணியாற்றிவர்களையும் விடுதியிலேயே தங்க வைத்ததோடு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என தெரிந்த பின்னரே மனைவி, குழந்தைகள் குடும்பத்தினரை சந்தித்தாராம்.