பிக்பாஸ் சீசன்4…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்4 தற்போது 80 ம் நாளை நெருங்கிவிட்டது. இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் தற்போது ஆரி, அனிதா, ரியோ, ஷிவானி, பாலாஜி, கேப்ரியல்லா, ஆஜித், ரம்யா, சோம் சேகர் ஆகியோர் இருக்கிறார்கள்.
பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் விசயத்தில் இவர்களுக்குள் போட்டி வலுத்துவிட்டது. அண்மையில் கூட ரேங்க்கிங் டாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ரியோ மற்றும் ஆரிக்கு இடையே ஒன்றாம் இடத்தை பிடிப்பதில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆரியிடம் வாக்குவாதம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் போல.
அண்மையில் ஆரியிடம் அனிதா நடந்து கொண்ட விதம் பெரும் முகம் சுளிப்பை உண்டாக்கியுள்ளது. மரியாதை குறைவாக நடந்து கொண்டது போல தெரிந்தது. ஆரிக்கு ஆரம்ப நாட்கள் முதலே ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் ஆரிக்கு பல திசைகளிலிருந்து தாக்குதல் வருகிறது. ஆனாலும் அவர் தனக்கு எதிராக வரும் சவால்களை கடந்து இரும்பு மனிதராகி விட்டார்.
எனவே அவர் தான் டைட்டில் வின்னர் என கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.’