என் தங்கைக்கு ஊர்க்காரர்கள் இப்படி செய்வார்கள் என்று நினைக்கவில்லை- மனம் திறக்கும் சாய் பல்லவி!

95

சாய்பல்லவி…

ரவுடி பேபி, மலர் டீச்சர் என எத்தனை அடையாளங்கள் தான் சாய்பல்லவிக்கு. பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி எல்லோருடைய ட்ரீம் காதலராக வலம் வந்தார்.

இவர் வருகைக்குப் பின்னால் டீச்சரை ரூட்டு விடும் பழக்கத்தை பசங்க பழகி கொண்டார்கள். அதன் பிறகு என்ஜிகே, மாரி 2 படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

இவர் முதன்முதலில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மலையாளத்தில் பிரேமம், கழி போன்ற படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். இவர் நடித்த ரவுடி பேபி பாடல் பெரும் சாதனை பெற்றது. சமீபத்தில் வெளிவந்த பாவக்கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் சிறப்பான நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார்.

இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார், அவரின் பெயர் பூஜா. கிட்டத்தட்ட இவரைப் போல தோற்றம் கொண்ட பூஜா, காரா என்ற படத்தில் நடித்தார். அவரது தங்கை பற்றி ஒரு பேட்டியில் சாய் பல்லவி கூறியிருந்தார்.

அதில் “என் தங்கை, அவளை விட நான் தான் அழகாக இருப்பதாக கருதுகிறார், அவரை விட நான் கொஞ்சம் நிறமாக இருப்பதால் அவர் இவ்வாறு நினைக்கிறாள். தங்கையின் கலரை பற்றி மற்றவர்கள் பேசுவதால் அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட தயங்குவது உண்டு.

சிறு வயது இருக்கும்போது அவள் விளையாட வெளியே செல்வாள், அப்போது, ஏற்கனவே நீ கருப்பு இதில் வெளியே விளையாட போறியா என ஊர்க்காரர்கள் பலமுறை கேட்டு இருக்கிறார்கள்.

இதைக் கேட்டு கேட்டு பலமுறை மனதால் பாதிக்கப்பட்டதாக அவள் கூறியிருக்கிறார்” என்று கூறினார். என்னது இது கலர் கம்மியா என நெட்டிசன்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து பெருமூச்சு விட்ட வண்ணம் உள்ளனர்.