சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ லேட்டஸ்ட் அப்டேட்: வைரலாகும் போஸ்டர்!

94

கோப்ரா………..

சீயான் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் அப்டேட்களை விக்ரமின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சற்றுமுன் கிறிஸ்துமஸ் விருந்தாக ‘கோப்ரா’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

ஏற்கனவே ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் 8 கெட்டப்புகளில் வித்தியாசமான தோற்றங்களில் சீயான் விக்ரம் இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது லுக்கில் உடலின் ஒரு பகுதி எழுத்துக்கள் போலவும் மற்றொரு பகுதி மனித உடல் போலவும் இருக்கும் வித்தியாசமான ஸ்டில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார்