அய்யயோ.. வேண்டாம் சாமி: ரசிகரின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த அர்ச்சனா!!

71

பிக்பாஸ்…….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அர்ச்சனா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. டாஸ்குகள் உள்பட அனைத்திலும் ஈடுபாட்டுடன் அவர் இருந்தாலும் அவர் பைனல் வரை செல்லாததற்கு முக்கிய காரணம் அன்பு குரூப் ஆரம்பித்ததே என்றும் அன்பு என்ற ஸ்டாட்டர்ஜியை வைத்து அவர் மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்ததாகவும், ஒருசில போட்டியாளர்களின் தனித்தன்மை வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணமாக இருந்தார் என்பதும் பலரது குற்றச்சாட்டாக உள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்த அர்ச்சனா அதில் ரசிகர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அவ்வாறு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது ’ஐயோ வேண்டாம் சாமி.. நான் இப்போது எனது வீடு என்ற சொர்க்கத்தில் இருக்கிறேன்’ என்று பதில் சொல்கிறார். இந்த பதிலுக்கு ரசிகரின் கேள்வி என்னவெனில், ‘நீங்கள் எப்போது மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக செல்வீர்கள்? என்பது தான்.

மேலும் இன்னொரு ரசிகர் ’ஆரி தான் டைட்டில் வின்னர்’ என்று கூறியபோது ’நன்றி நானும் அதையே விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் தந்தை இறந்தது குறித்த வாக்குவாதத்தில் அர்ச்சனா மற்றும் நிஷா இருவரும் ’சாரி அப்பா’ என்று அப்பாவிடம் விண்ணை நோக்கிக் கூறிய புகைப்படத்தை பதிவு செய்து கிண்டலாக கமெண்ட் பதிவு செய்த ஒருவருக்கு, ‘என்னுடைய தந்தையின் இழப்பு உங்களுக்கு கிண்டலா? என் தந்தை மேலே இருந்து உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வார்’ என்று கூறினார்.

மேலும் வெளியில் வந்தும் அன்பு குரூப் மீண்டும் இணைந்துள்ளது என்றும், அர்ச்சனா என்பவர் மீது நான் தனிப்பட்ட மதிப்பு வைத்திருந்தேன் என்றும் ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவரது விளையாட்டை பார்த்து நான் அவரை ரொம்ப வெறுக்கிறேன் என்றும் ஒரு ரசிகர் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா ’உங்கள் கருத்துக்கு நன்றி, ஆனால் அதே நேரத்தில் வெறும் 67 மணி நேரத்தில் என்னுடைய கேரக்டரை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்? என்று கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜீ டிவியிலேயே அர்ச்சனா இருந்திருக்கலாம் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு பதிலளித்த அர்ச்சனா ’எப்போதும் நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கியது இல்லை என்றும் நான் இப்போதும் சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.