‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்: மாதவன் – விஜய்சேதுபதி வேடத்தில் நடிப்பது யார் யார்?

59

விக்ரம் வேதா…….

இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ என்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இந்த படம்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படம் கடந்த சில வாரங்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. ஹிந்தியில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாதவன் நடித்த போலீஸ் கேரக்டரில் சயிப் அலிகான் நடிக்க இருப்பதாகவும், விஜய் சேதுபதி நடித்த கேங்க்ஸ்டர் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் ஷ்ராதா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி உள்பட மற்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியில் இயக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.