விஷால் படத்தில் யுவன் செய்த மியூசிக்கல் மேஜிக்: வைரலாகும் வீடியோ!

24

சக்ரா………..

விஷால் நடித்து தயாரித்து வரும் ’சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவில் முடித்து இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியிட விஷால் திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சக்ரா’ படத்தின் பின்னணி இசையை கிட்டத்தட்ட யுவன்சங்கர்ராஜா முடித்து விட்டார் என்றும் அவர் இந்த படத்தில் ஒரு மியூசிக்கல் மேஜிக் செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கும் வீடியோ ஒன்றும் இன்று வெளியாகியுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா பின்னணி இசையை கம்போஸ் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் ஒரு சில வினாடிகளே உள்ள நிலையில் இந்த வீடியோவில் உள்ள இசையிலிருந்து இந்த படத்தில் யுவன் எந்த அளவுக்கு பெஸ்ட் பின்னணி இசையை கொடுத்து இருப்பார் என்றும் அறிய முடிகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், ஷராதா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தியாகு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.