சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர்: வைரல் புகைப்படம்!

570

மாநாடு…

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு தற்போது சபரிமலை சென்றுள்ளதால் அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் ஜனவரி முதல் சிம்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் நட்சத்திரக் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு பழம்பெரும் குணச்சித்திர நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவர்தான் வாகை சந்திரசேகர்.

’புதிய வார்ப்புகள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’நிழல்கள்’ ’பாலைவனச்சோலை’ ’சிவப்பு மல்லி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த வாகை சந்திரசேகர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது ’மாநாடு’ படத்தில் இணைந்துள்ளார்.

வாகை சந்திரசேகர் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருந்து அவர் இந்த படத்தில் ஒரு அரசியல்வாதி கேரக்டரில் நடிப்பதாக தெரிகிறது.