முக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவுள்ள மாஸ்டர் பட நடிகர், வெளியான சூப்பர் தகவல் இதோ..!

94

அர்ஜுன் தாஸ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் கைதி, இப்படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அர்ஜுன் தாஸ், தனது முதல் திரைப்படத்திலே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அந்தகாரம் திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

அடுத்ததாக தளபதி விஜய்யுடன் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட மிக சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குனருடன் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைத்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.