ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

96

ராகவா லாரன்ஸ்..

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடிப்பில் உருவாகிய ‘லட்சுமி’ என்ற திரைப்படம் கடந்த தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் லாரன்ஸ் தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்ஸின் பிறந்த நாளன்று வெளியாகி ‘ருத்ரன்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திகில் கதையம்சம் கொண்ட படமாக இந்த படம் உருவாகவிருக்கும் நிலையில் இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வா என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அதில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசனே இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா ஆகிய வெற்றி படங்களை தயாரித்த கதிரேசன், தான் இயக்கும் முதல் படத்தை வெற்றிபடமாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..