அஜித்…
தமிழ் திரையுலகில் தனது புகழுக்காக போட்டோவைப் ஒரு வீடியோவை போடுவது என்று நடிகைகள் ஆரம்பித்தாலும், பேரை சொன்னாலே அரங்கம் அதிரும் அளவுக்கு மக்கள் ஆர்ப்பரித்தது தல அஜித்திற்கு தான்.
பல அவமானங்கள் இடையிலும் புறக்கணிப்பு இடையிலும் தளராமல் உயர்ந்து என்று வேற லெவல் உயரத்தில் நிற்கிறார். நடிப்பு மட்டுமின்றி ஆளில்லா விமானம் ஓட்டுவது பைக் ரேஸ் சமையல் என அட்டகாசமாக இருக்கிறார்.
வில்லனாக கூட நடிக்க தயங்காதவர் தனது 50வது படமான மங்காத்தாவில் சால்ட் அண்ட் பெப்பர் என்ற புதிய லுக்கை அறிமுகம் செய்து ட்ரண்ட் செட் ஆக்கினார். வழக்கமாக தனது படங்களில் கலந்து கொள்ளாதவர் அஜித் குமார்.
ஆனால் தற்போது அவர் எங்கு சென்றாலும் அல்லது அவர் தனிப்பட்ட புகைப்படம் வெளியிடப்ட்டாலும் அது படத்தின் புரமோஷனை விட வேற லெவல் ரீச்சாகிறது. ஏற்கனவே தான் நடித்து வரும் வலிமை படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் வெளிவராத நிலையில் அவரது ரசிகர்கள் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரை வறுத்தெடுக்க தொடங்கினர்.
அதன் பொருட்டு அவன் சங்கர் ராஜா தனது ஸ்டூடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வலிமை என்று கேப்ஷன் போட்டு வெளியிட்ட பின் கொஞ்சம் அமைதி ஆனார்கள். இன்று அஜித் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அவரைப்பார்த்து சல்யூட் அடித்த செக்யூரிட்டி கைகொடுத்து நல்லா இருக்கிறேன் என்று கூறிவிட்டு செல்லும் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிட்டு ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு பார்க்கின்றனர்.
இந்த வீடியோ வெளி வந்ததால் போனி கபூரை கொஞ்சம் விட்டு வைப்பார்கள் என்று நம்புகிறோம். நாளை போனி கபூரை காப்பாற்றிய தல என்று அவரது ரசிகர்கள் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Unseen Video. #Thala #Ajith ❤#Valimai pic.twitter.com/4ecWTDRuhg
— Ajith Network (@AjithNetwork) December 24, 2020