காஜல் அகர்வாலை அடுத்து மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற பிரபல நடிகை!

506

நிஹாரிகா…

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார் என்பது தெரிந்ததே.

அவர் மாலத்தீவில் இருந்து ஹனிமூன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் மகள் நிஹாரிகாவுக்கு சமீபத்தில் சைதன்யா என்ற பொறியாளருடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் உதய்பூரில் உள்ள ஆடம்பர அரண்மனை ஹோட்டலில் கோலாகலமாக டிசம்பர் 9ஆம் தேதி நடந்தது என்பதும் பல திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் ரிசப்ஷன் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதிகள் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மாலத்தீவுக்கு கணவர் சைதன்யாவுடன் ஹனிமூன் சென்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் காஜல் போலவே நிஹாரிகாவும் மாலத்தீவில் இருந்தபடியே அழகழகான புகைப்படங்களையும் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலத்தீவுக்கு காஜல் அகர்வால் ஹனிமூனுக்கு சென்ற பின்னர் பல தமிழ் நடிகைகள் மாலத்தீவுக்கு சென்ற நிலையில் தற்போது லேட்டஸ்டாக தேனிலவை கொண்டாட நிஹாரிகாவும் மாலத்தீவை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.