நயன்தாராவின் வளர்ச்சிக்கு இதுதான் முக்கிய காரணம்: ‘மாஸ்டர்’ நடிகையின் சர்ச்சை கருத்து!

80

நயன்தாரா….

நடிகை நயன்தாராவின் அபாரமான வளர்ச்சிக்கு இது ஒன்று தான் காரணம் என விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகை சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று தெரிவித்துள்ளது நயன்தாரா ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஆண்ட்ரியா நயன்தாரா குறித்து கூறிய போது ’ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்ததே

அவரது வளர்ச்சிக்கு காரணம் என்றும், ஆனால் நான் என்னுடைய படங்களில் சிறந்த கதைகள் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன் என்றும், கதைக்கு தேவை என்றால் மட்டுமே நான் நெருக்கமாக நடித்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்ததால் தான் நயன்தாராவின் வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று ஆண்ட்ரியா தெரிவித்த சர்ச்சை கருத்து நயன்தாரா ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.

ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த பல நடிகைகள் தற்போது திரை உலகை விட்டு காணாமல் போயுள்ள நிலையில் நயன்தாராவின் வெற்றிக்கு இது ஒன்றை மட்டுமே காரணமாக ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளது தவறு என்று நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் ஆண்ட்ரியாவும் கமல், அஜித், விஜய், விஷால், சரத்குமார், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.