அந்த நடிகை கிட்ட மனுஷன் போவானா? ஆள விடுங்க சாமி என அலறும் இயக்குனர்கள்.!!

596

நித்யா மேனன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை பிரபல நடிகையை பார்த்து பயப்படும் சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமர்சியல் படங்களில் கிளாமர், குத்து பாட்டு, ஹீரோவுடன் ரொமான்ஸ் போன்ற கதைகளை ஓரம்கட்டி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நித்யா மேனன்.

இவரது நடிப்பு திறமை கண்டு இந்திய அளவில் உள்ள நடிகர்களே மிரண்டு போயுள்ளனர். மலையாள நாயகியாக இருந்தாலும் தற்போது இந்திய சினிமாவையே ஆட்சி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

சமீபகாலமாக தமிழ் இயக்குனர்கள் பலர் நித்யா மேனனை சந்தித்து கதை சொல்ல மறுத்து வருகின்றனர். அதற்குக் காரணம் ஒவ்வொரு இயக்குனர் சொல்லும் கதையிலும் பல்வேறு குறைகளை கண்டறிந்து சுட்டிக் காட்டி வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் ஹீரோவுக்கு இணையான வேடம் தனக்கு இருந்தால் மட்டுமே நடிப்பேன் என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம். கமர்சியல் இயக்குனர்களை பக்கத்திலேயே சேர்த்துக்கொள்வதில்லையாம் அம்மணி.

அதற்குக் காரணம் தற்போது ஹிந்தியில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருவதால் நித்யா மேனன் இந்த மாதிரி கண்டிஷன் போடுகிறாராம்.

தமிழ் இயக்குனர்களோ, ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என பட வாய்ப்பு குறைந்த பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும்போது நம்ம பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார்களாம்.