வயதான நடிகருடன் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் நடிகை!

70

நடிகை…

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர், வயதான நடிகருடன் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.

தமிழ்நாட்டை சேர்ந்த அழகிய நடிகை, அக்கட தேசத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தாராம்.

இங்கு படங்கள் கைகொடுக்காததால் டோலிவுட் பக்கம் சென்ற அந்த நடிகை அங்கு பிசியான நடிகையாகிவிட்டாராம். தற்போது அவருக்கு ஒரு ரீமேக் பட வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.

அந்த படத்தில் வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகினார்களாம். நடிக்க ஓகே சொன்ன அந்த நடிகை ரூ.2 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம்.

கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா? என்று படக்குழுவினர் ஆலோசிக்கிறார்களாம்.