பூலோகம் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜெயம்ரவி!

71

ஜெயம்ரவி…

ஜெயம்ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. அடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார்.

இன்னும் ஒரு சில நாட்களே ஜெயம்ரவியின் போர்ஷன் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. அதை முடித்து விட்டு அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கண மன படத்தை முடித்து கொடுக்கிறார்.

இதுதவிர ஜெயம்ரவி, ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்துக் கொடுக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் கதை, இயக்குனர்கள், உடன் நடிப்பவர்கள் அத்தனை சாய்சும் ஜெயரம் ரவியுடையது தான்.

இதனால் கடந்த சில மாதங்களாக தீவிரமாக கதை கேட்டு வந்தார். கிட்டத்தட்ட 60 கதைகள் கேட்டதில் பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் சொன்ன கதைக்கு ஓகே சொல்லியுள்ளார்.

பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் த்ரிஷா, ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் நடித்தனர். வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையமாக கொண்ட கதை.

இப்போது மீண்டும் கல்யாணும், ஜெயம் ரவியும் இணைகிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஆக்ஷன் படம்.