அதுதான் தெரியுமே! இன்னும் எதுக்கு அப்டேட்!

65

மாஸ்டர்..

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், நாசர், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. மாஸ்டர் தமிழ் டைட்டிலை விட மாஸ்டர்: தி விஜய் என்று ஹிந்தியில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில், இந்தப் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

ஏற்கனவே மாஸ்டர் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரயிருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியானது. மேலும், இன்னும் பல திரையரங்குகளில் வரும் 7 ஆம் தேதி மாஸ்டர் டிக்கெட் விற்பனை தொடங்கயிருக்கிறது.

இதற்கிடையில், கொரோனா காரணமாக ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்கின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதியன்று மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் எங்களிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

ஜனவரி 1 முதல் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். 100% பாவையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று கூறியவர் , அனைத்து ஓ.டி.டி தளங்களும் விஜய்யிடம் போட்டி போட்டு மாஸ்டர் படத்தை கேட்டனர். ஆனால் விஜய் தீர்க்கமான முடிவு எடுத்து திரையரங்கில் வெளியீடு செய்கிறார். அவரை போலவே அனைத்து நடிகர்களும் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.