மகதீரா ராம்சரணுக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சியில் திரையுலகினர்!

78

ராம் சரண் தேஜா…

தெலுங்கு பட உலகின் இளைய தலைமுறையில் கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் ராம் சரண் தேஜா. நடிகர் சிரஞ்சீவியின் மகனான இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 2007ஆம் ஆண்டு சிறுத்தா என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் 2009ல் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படம் பெரும் வெற்றி பெற்றது.

தெலுங்கு இண்டஸ்ட்ரி மட்டுமன்றி அந்த படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரீச் ஆனார். அதன்பின் நாயக், ஆரஞ்சு, எவடு பல படங்களில் நடித்துள்ள ராம்சரண் ரங்கஸ்தலம் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அடுத்து ராஜமௌலியின் இயக்கத்தில் RRR படத்தில் ஜூனியர் NTR, ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். இதனிடையில் கொரோனா பரிசோதனை செய்திருந்த ராம்சரண், தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடன் இருந்தவர்கள் அனைவரையும் பத்திரமாக இருக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். லண்டனிலிருந்து ஹைதராபாத் வந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை தொடர்ந்து இந்த செய்தி டோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகினரும் அவரது ரசிகர்களும் விரைவில் குணமடைந்து திரும்ப வரவேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.