ராம்சரணைத் தொடர்ந்து அவரது சகோதரர் வருண் தேஜுக்கும் கொரானோ!

76

வருண் தேஜ்…

தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவுக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டு அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அது பற்றிய தகவலை அவரே நேற்று காலை டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

தன்னுடன் கடந்த சில நாட்கள் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ராம் சரணின் சகோதரர் நடிகர் வருண் தேஜ், தனக்கு கொரானோ தொற்று ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ராம் சரண், அல்லு அர்ஜுன், வருண் தேஜ், அல்லு சிரிஷ், சாய்தரம் தேஜ் என சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த இளம் நடிகர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் வருண் தேஜ்.

ஒருவேளை அந்த கொண்டாட்டம் கூட கொரானோ பரவலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள்.

சிரஞ்சீவி குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு பேருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது தெலுங்குத் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.