கொரோனாவில் இருந்து குணமான சூர்யா-கார்த்தி பட நடிகை!

76

ரகுல் ப்ரீத்தி சிங்…

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் தான் குணம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதை பார்த்து வந்தோம். அந்த வகையில் சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.

இவர் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார் என்றும் மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை அளித்து வந்தனர் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ரகுல் ப்ரீத்திசிங், கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டார்.

அவருக்கு கோவிட் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து ரகுல் ப்ரீத்திசிங் தனது சமூக வலைத்தளத்தில் ’எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டதாக உணர்கிறேன்.

எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2021ஆம் ஆண்டு நல்ல பாசிடிவ் எண்ணத்துடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடங்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.