உடற்பயிற்சியின் போது மாரடைப்பு: விஜய்யின் மாஸ்டர் பட நடிகர் மரணம்!

74

அருண் அலெக்சாண்டர்…

டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார்.

சினிமா துறைக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக, சினிமா தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருந்தாலும், சினிமா பிரபலங்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இயக்குநரும், நடிகருமான விசு, நடிகர் சேது, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வடிவேலு பாலாஜி, சின்னத்திரை நடிகை சித்ரா, சுசாந்த் சிங் ராஜ்புத், இர்பான் கான், நடிகர் பெரைரா, தவசி என்று பல பிரபலங்கள் மரணம் அடைந்தது சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளார். உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 48. கடந்த 10 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில், கைதி, கோலமாவு கோகிலா, ஜடா, மாநகரம், பிகில் என்று பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் அலெக்சாண்டர் மறைவு பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.