அரசியல் கட்சி தொடங்க போவதில்லை, கதம்! கதம்!! – ரஜினிகாந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு!

80

ரஜினிகாந்த்…

அ ர சியல் க ட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்ததால் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் டிசம்பர் 30ஆம் தேதியன்று கட்சி தொடங்கும் நாள் அறிவிக்கப்படும் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், அதன்பின் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றார்.

தினமும் படப்பிடிப்பில் கொரோனா பரிசோதிக்கபட்ட பிறகே அனைவரும் படப்பிடிப்பிற்கு அனுமதிக்கப்பட, திடீரென 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர், ரஜினியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருந்தாலும், ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய ரஜினிகாந்த், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் “உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.