எல்லா பொருட்களையும் இளையராஜாவிடம் ஒப்படைத்த பிரசாத் ஸ்டூடியோ!

52

இளையராஜா…

சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவிற்கு சொந்தமான அனைத்து பொருட்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை வடபழனியில் உள்ள சாலிகிராமத்தின் பிரசாத் ஸ்டூடியோவில் தான் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளாக பாடல்கள் ஒலிப்பதிவு, பின்னணி இசை என்று அனைத்து பணிகளையும் செய்து வந்துள்ளார்.

பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜாவின் மற்றொரு வீடாகவும் இருந்துள்ளது. பாடல் ஒலிப்பதிவு கூடத்துடன் இளையராஜாவிற்கு என்று பிரத்யேகமாக 5 அறைகளும் இருந்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவிற்கு வாடகை கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இடத்தை காலி செய்ய வேண்டும் என்று பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஸ்டூடியோ நிர்வாகத்திடன் மீது இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தனது அறையை மட்டும் பூட்டிய அவர் அதன் பிறகு அங்கு செல்லவில்லை.

இந்த நிலையில், நீதிமன்றம் நியமித்த ஆணையர்களின் முன்னிலையில் இளையராஜாவுக்கு சொந்தமான அனைத்து பொருட்களும் அவரது தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.