தயாரிப்பாளராக மாறுகிறார் சோனு சூட்!

67

சோனு சூட்….

இந்த கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கும், பலவிதமான உதவிகளை செய்ததில், பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், மக்கள் மத்தியில் நிஜமான ஹீரோவாக மாறிவிட்டார்.

இதை தொடர்ந்து அவர் ஏற்கனவே வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வரும் படங்களில் கூட அவரது இமேஜ் கெட்டுவிட கூடாது என, காட்சிகளில் மாற்றம் செய்து வருகிறார்கள். சிரஞ்சீவியுடன் சோனு சூட் நடித்துவரும் ஆச்சார்யா படத்தில் கூட அப்படி ஒரு மாற்றம் சமீபத்தில் நடந்தது..

இன்னொரு பக்கம் சோனு சூட்டை கதையின் நாயகனாகவும், கதையை தாங்கிப்பிடிக்கும் குணச்சித்திர நடிகராகவும் முன்வைத்து சில இயக்குனர்கள் கதைகளை உருவாக்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என சோனு சூட்டும் அறிவித்துள்ளார். மேலும் தானும் ஒரு தயாரிப்பாளராக மாறி, படங்களை தயாரிக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளார் சோனு சூட்.

இதுபற்றி அவர் கூறும்போது, “அடுத்தமுறை எனது படத்தில் நடிகர் -தயாரிப்பாளர் என்கிற அடைமொழியுடன் வருவேன் என நம்பலாம்.. மக்களை உற்சாகப்படுத்துகின்ற விதமான, எனக்கு நம்பிக்கை தரும் கதைகளை, நான் எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.